எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமெரிக்காவில் தயாரிக்காமல் இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஒரு நிறுவனம் தங்கள் மருந்து உற்பத்தி ஆலையைக் கட்டவில்லை என்றால், வரி விதிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், மருந்து நிறுவனம் கட்டுமானங்களை தொடங்கினால் அந்த மருந்துப் பொருட்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மாறாக அமெரிக்காவில் தயாரிக்காமல் இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று, அக்டோபர் 1ம் தேதி முதல் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரியும், பர்னிச்சர் பொருட்களுக்கு 30 சதவீத வரியும், கனரக லாரிகளுக்கு 25 சதவீத வரியும் அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.
இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சுமார் 31 ஆயிரத்து 626 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. நடப்பாண்டின் முதல் பாதியில் மட்டும் 32 ஆயிரத்து 505 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்து உள்ளனர்.